நடிகர் சூரியா தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வலம் வருபவர் அந்தவகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சூரரை போற்று ஜெய்பீம் இப்பொது எதற்கும் துணிந்தவன் என அனைத்து திரைப்படங்களுமே வித்தியாசமான திரைப்படங்களாக இருந்தன.
ஆனால் அவர்கள் எடுத்துரைக்கும் விஷயம் ஒன்றே ஒன்றுதான் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நல்லதொரு சமூக அக்கறை உள்ள விஷயங்களை கொடுத்து அசத்துகிறார். சினிமா உலகில் ஒரு உச்ச நட்சத்திரம் சமூக அக்கரை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து வெற்றி காண்பது மிகப் பெரிய கஷ்டம் அண்மை காலமாக அஜித் சூர்யா போன்றவர்கள்.
இந்த மாதிரியான சிறப்பான படங்களை கொடுப்பது நல்ல ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் பிரதான இயக்குனரான பாலாவுடன் மீண்டும் ஒருமுறை இணைய இருக்கிறார்.
அந்த படத்திற்கான வேலையையும் தற்போது தொடங்கியுள்ளது. இந்த படத்திற்காக பிரமாண்ட செட் போடப்பட்டு படம் உருவாகி வருகின்றது மேலும் பல்வேறு இடங்களிலும் இந்த படம் எடுக்கப்பட இருக்கின்றனராம் கடல் சார்ந்த பகுதிகளான கன்னியாகுமரி திருச்செந்தூர் தூத்துக்குடி போன்ற இடங்களில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம், சூரரைப்போற்று, எதற்கும் துணிந்தவன் படம் போல இந்த படமும் ஒரு சமூக அக்கறை உள்ள ஒரு படமாக நிச்சயம் இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை..