தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ நடிகர் சூர்யா இவர் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. கடைசியாக கூட சூர்யா நடித்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது.
இதனால் சூர்யாவின் மார்க்கெட் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா முதன்முதலாக இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து தனது 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு தற்போது பெயர் வைக்கப்படவில்லை என்பதால் சூர்யா 42 என சொல்லப்பட்டு வருகிறது.
இந்த படம் ஒரு வரலாற்று படமாக உருவாகி வருகிறது . படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே ஆரம்பித்து விறுவிறுப்பாக வேலைகள் போய்க் கொண்டிருக்கின்றன. சூர்யா 42 திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பட்டாணி, மிருணாள் தாகூர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மற்றபடி இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா 42 திரைப்படம் குறித்து ஒரு செம்ம தகவல் வெளியாகி உள்ளது அதாவது சூர்யா 42 திரைப்படத்தில் அவர் சுமார் 13 கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. திரை உலகில் உச்ச நட்சத்திரங்களான சிவாஜி, கமல் போன்ற நடிகர்களுக்கு பிறகு அதிக கெட்டப் நடிகர் சூர்யா தான் போட்டுள்ளார் எனவும் பேசப்படுகிறது.
எனவே இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது மேலும் இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகுவதால் நிச்சயம் சூர்யா 42 திரைப்படம் 1000 கோடி வசூல் அள்ளும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவலை நடிகர் சூர்யா ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.