தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சூர்யா இவர் அண்மை காலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெறுகின்றன. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் வெற்றி பெற்றன அதனைத் தொடர்ந்து வணங்கான் படத்தில் நடித்தார்
ஆனால் இந்த படத்தின் போது பாலாவுக்கும் சூரியாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட அந்த படம் பாதியிலேயே டிராப்பானது அதைத் தொடர்ந்து சூர்யா பாசிட்டிவாக சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து தனது 42வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது இதில் சூர்யா பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என சொல்லப்பட்டது தவிர மத்தபடி எந்த ஒரு தகவலையும் பட குழு வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தது
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் குறித்து மேலும் ஒரு தரமான அப்டேட் கிடைத்துள்ளது அது என்னவென்றால். சூர்யா 42 திரைப்படம் வரலாற்று திரைப்படம் இந்த திரைப்படத்தில் சூர்யா ரெண்டு மூணு கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை மொத்தம் 13 கதாபாத்திரங்களில் சூர்யா சூப்பராக நடித்து வருகிறாராம்
மேலும் இந்த படத்தின் சூட்டிங் அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படபிடிப்பு அனைத்தும் முடிந்துவிடும் என கூறப்படுகிறது ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை இருப்பினும் இந்த தகவல் தற்போது சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளதோடு மட்டுமல்லாமல் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.