நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருந்து வருகிறார் இவர் அண்மை காலமா நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி படங்கள்தான் அந்த வரிசையில் இப்பொழுது கூட சூர்யா பாலா கூட்டணியில் உருவாகிய வணங்கான் திரைப்படத்தை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் சூர்யா நடித்து வந்தார் திடீரென என்ன ஆனது தெரியவில்லை இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஆனால் சூர்யா சும்மா இருக்க கூடாது என்பதற்காக சிறுத்தை சிவா உடன் கதை கேட்டு இருந்தார்.
அவரை உடனே அழைத்து படத்தின் பூஜை போடப்பட்டது தற்போது ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா ஒரு படத்தை பாதியில் வைத்து விட்டு இன்னொரு படத்தில் நடிக்க மாட்டார் ஆனால் சிறுத்தை சிவாவின் கதை ரொம்ப பிடித்து போனதனால் தான் உடனே சிறுத்தை சிவா உடன் பூஜை போடப்பட்டு சூட்டிங் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு சரித்திர கதையை மையமாக வைத்து படம் உருவாகுவதாக பல பேச்சுக்கள் வெளிப்படுகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யாவின் 42வது திரைப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி உள்ள திஷா பாட்னி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.
இந்தப் படம் கற்பனைக்கு எட்டாத உலகத்தை பார்வையாளர்களுக்கு பெரிய திரையில் காண்பிக்கும். சூரியா சாருக்கு ஜோடியாக நடிப்பது மிகவும் தனி தத்துவமானது. இதுவரை நான் பார்த்திடாத அவதாரத்தை ரசிகர்களுக்கு காட்ட ரொம்ப ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்..