விக்னேஷ் சிவன்-நயன்தாரா மீது கமிஷனர் அலுவலகத்தில் வாடகைத்தாய் குறித்து புகார்.! கொடுத்தவர் யார் தெரியுமா.?

nayanthara-vignesh-shivan
nayanthara-vignesh-shivan

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு தூணாக இருந்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் கடந்த மதம் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது அது மட்டுமல்லாமல் அந்த படத்தின் போது அவர்களின் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டதை பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.

இதை அறிந்த நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையில் ஒரு பிரமாண்டோ ஹோட்டலில் கோலாலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை என ஒரு அறிக்கை வெளியிட்டிருந்த நயன்தாரா திருமணம் ஆகி நான்கு மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி விட்டதாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தனர்.

இவர்கள் அறிவித்தது தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் மீதும் நயன்தாரா மீதும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை மாநகர காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடைந்து குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்ற நிலையில் தான் செயற்கை கருத்தரிப்பு முறை கடைபிடிக்கப்படும் என்றும் ஆனால் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தெரிவித்திருப்பது சட்டத்தை மீறிய செயல் என்றும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகை குறித்து சென்னை காவல்துறை ஆணையர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.