அஜித்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.. சூர்யாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் – சுதா கொங்கரா ருசிகர தகவல்

Ajith
Ajith

Sudha kongara : சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் வித்தியாசமான கதை மற்றும்  ரோலில் நடிக்க ஆசைப்படுவது வழக்கம் அந்த வகையில் நடிகர் அஜித்குமார்  ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தார் ஒரு கட்டத்தில் ஆக்சன் படங்களில் அதிகம் தீர்வும் காட்டினார் இப்பொழுது ஆக்சன் படங்களில் நடித்தாலும்..

அதில் அதிகம் சமூக அக்கறை கலந்த மெசேஜ் காணப்படுகிறது. இப்படி ஓடிக்கொண்டிருக்கும் அஜித்  மங்காத்தா படத்தில் மட்டும் வில்லன் ரோலில் நடித்து அசத்தி இருப்பார் இந்த படத்தில் அவர் எப்படி இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது அப்படி தான் சுதா கொங்கராவுக்கும் அதிர்ச்சியை கொடுத்ததாம்.

இது குறித்து சுதா கொங்கரா  ஒரு பேட்டியில்  கூறியிருந்தார் அதாவது மங்காத்தா படம் பார்த்து வெங்கட் பிரபுவுக்கு இரண்டு பக்க அளவில் குறுஞ்செய்திகளை அனுப்பினாராம் இது எப்படி உன்னால் முடிந்தது என்றும் அதுவும் ஒரு பக்கா சூப்பர் ஸ்டாரான அஜித்தை வைத்து எப்படி இதை நடத்தி காட்டினாய் என்று அதில் குறிப்பிட்டு இருந்தாராம்..

ஏனெனில் படத்தில் ஹீரோயிசத்தை மட்டும் காட்டி நடிக்கும் நடிகர்கள் மத்தியில் அஜித் இதை எவ்வாறு செய்தார் எப்படி இதை வெங்கட் பிரபு சாத்தியப்படுத்தினார் என்ற கேள்வி சுதா கங்காரா மனதில் இருந்ததாம் அதன் பின் அதற்கு ஒரு சின்ன உதாரணத்தையும் கூறினார் சூரரை போற்று படத்தில் சில கெட்ட வார்த்தைகளை சூர்யா பேச வேண்டும்.

ஆனால் சூர்யாவுக்கு கெட்ட வார்த்தைகளை பிடிக்காதாம்.. படப்பிடிப்பில் பேச தயங்கினார் ஆனால் டப்பிங் வரும்போது தொடர்ந்து 10 கெட்ட வார்த்தைகளை போட்டு திட்டுவது போல பேசிக்கொண்டு இருந்தாராம் அப்பொழுது சுதா கொங்கரா சூரியாவிடம் யோவ் அப்பா பார்த்தா திட்டுவாருய்யா  நீ வாயில கெட்ட வார்த்தைகளை அடிக்கிகிட்டு இருக்க  என்று கூறினாராம்.

மேலும் ஹீரோ என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை முதன் முதலில் பிரேக் செய்தவர் வெங்கட் பிரபு என்றும் யாரும் அந்த அளவுக்கு உத்தமனாக இருக்க முடியாது என்றும் ஒவ்வொரு நல்லவனுக்குள்ளேயும் ஒரு கெட்டவன் இருக்கிறான் என்று சுதா கொங்கரா கூறினார்.