நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற அந்தலேஜ் நடித்து வந்தார்.
இந்த நிலையில் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் தன்னுடைய நாற்பதாவது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் இந்த திரைப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை இந்த நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு ,சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் டி இமான் தான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
சூர்யாவுடன் முதன் முறையாக டி இமான் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது அதன் பிறகு சூர்யாவுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் எப்பொழுது சூர்யா கலந்து கொள்ளப் போகிறார் என விரைவில் அறிவிப்பார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யா இல்லாத காட்சிகள் அனைத்தையும் முதல்கட்ட படப்பிடிப்பில் முடித்துள்ளார்கள் படக்குழு. அப்படி இருக்கும் வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் வினை ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அவர் வில்லனாக தான் களமிறங்கியுள்ளார் என கூறப்படுகிறது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.