குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து தற்பொழுது சீரியல் நடிகையாக நடிக்கும் சூரியவம்சம் சமந்தா.!

பிரபல ஜீ தமிழில் தற்பொழுது பல சீரியல்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளது அந்த வகையில் புதிதாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் சூரிய வம்சம். இந்த சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிகிதா ராஜேஷ்.

இவர் சூரியவம்சம் சீரியலில் சமந்தா என்ற கேரக்டரில் அமெரிக்க பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தான்  சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் என்று இணைத்துள்ளோம் ஆனால் நிகிதா ரஜேஷ் தனது 3 வயதில் இருந்து சின்னத்திரையில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்,நிகிதா ராஜேஷ் தெலுங்கில் பல சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். அந்த வகையில் இவர் ஓமணத்திங்கள்  பக் ஷி என்ற சீரியலில் மூன்று வயது குழந்தையாக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இவரின் டீன் ஏஜ் வயதில் மஞ்சுருகும் காலம் சீரியலில்  ஜானிக்குட்டி கேரக்டரில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். நிகிதா ராஜேஷின் அப்பா  மலையாளத்தில் சீரியலின் டைரக்டர், அவரின் அம்மா வனத்துறையில் பணியாற்றி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல ரியால்டி ஷோக்களிலும்  பிரபலம் அடைந்தார். இவர் தமிழ் சினிமாவிற்கு புதிய நடிகையாக இருந்தாலும் மலையாள சினிமாவில்  ஒரு முன்னணி நடிகை ஆவார்.