சூர்யா நடிப்பில் வர இருக்கும் புதிய 5 படங்கள்.. Fans மீட்டில் கொடுத்த அப்டேட்

Actor Surya

Surya : நடிகர் சூர்யா வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக  நடித்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தான் அடுத்து நடிக்கவிருக்கும் 5 படங்கள் என்ன என்பது குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

கங்குவா : தொடர்ந்து வித்தியாசமான படங்களில் கமீட்டாகி வரும் சூர்யா. சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து கங்குவா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் படம் முழுக்க முழுக்க வரலாற்று கதை அம்சமுள்ள ஒரு படமாக உருவாகி வருகிறது.

சூர்யா 43 : பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் பெரிய ஹிட் அடித்தது தொடர்ந்து அவருடன் மீண்டும் கைகோர்த்து ஒரு படத்தில் நடிகர் உள்ளார் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க வருகிறார் இந்த படத்தை 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.

வாடிவாசல் :  விடுதலை 2 படத்தை முடித்துவிட்டு  வெற்றிமாறன் சூர்யாவுடன் கைகோர்த்து வாடிவாசல் படத்தை எடுக்க இருக்கிறார் இந்த படத்தை சூர்யா ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ரோலெக்ஸ் : விக்ரம் படத்தில் சூர்யா கடைசியாக ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டு இருந்தார். இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு தனி படமாக எடுக்க ரசிகர்கள் கூறி வந்த நிலையில்  ரோலெக்ஸ் தனிப்படமாக உருவக இருப்பதாக சூர்யா அப்டேட் கொடுத்துள்ளார்.

இரும்பு கை மாயாவி : ரோலெக்ஸ் படத்தை முற்றிலுமாக முடித்த விட்டு பின்னர் லோகேஷ் உடன் மீண்டும் கைகோர்த்து “இரும்பு கை மாயாவி” என்னும் படத்தை எடுத்திருக்கிறார்.  சூர்யா அடுத்து இந்த 5 திரைப்படங்களில் தான் நடிக்க இருக்கிறாராம்.