சூர்யாவின் நடிப்பில் ஓவர் ஆட்டிட்யூட் இருக்கும்.? எனக்கு சுத்தமாக பிடிக்காது.. சினிமா பிரபலம் பேச்சு.!

surya-
surya-

தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுத்து வருபவர் நடிகர் சூர்யா இவர் கடைசியாக நடித்த ஜெய் பீம், எதற்கு துணிந்தவன் போன்ற படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றியடைந்தது அதனைத் தொடர்ந்து பாலாவுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வணங்கான் திரைப்படத்தில் நடித்தும், தயாரித்தும் வந்தார்.

படத்தின் ஷூட்டிங்கின் போது பாலா நடிகர் சூர்யாவுக்கு சரியாக மரியாதை கொடுக்கவில்லை மேலும் அங்கும் எங்கும் அலையவிட்டு உள்ளார் ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா வெளியே வந்தார் அதனைத் தொடர்ந்து  சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து தனது 42 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஒரு சங்க காலத்து படமாக உருவாகி வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா பிரபலம் அந்தனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யா குறித்து பேசியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளப்பக்கத்தில் சூர்யாவின் புகைப்படத்தை போட்டு நெட்டிசன்கள் கண்டபடி திட்டிக் கொண்டிருக்கிறார்களாம் காரணம் அவர் மும்பையில் வீடு வாங்கியதன் விளைவுதான்..

அதுமட்டுமில்லாமல் ஜோதியாக பாலிவுட்டில் கவனம் செலுத்த உள்ளதாகவும் சூர்யா குடும்பத்துடன் அங்கேயே இருக்கப்போவதாகவும் நினைத்து நெட்டிசன்கள் பலரும் வடக்கனாகிவிட்டாரா சூர்யா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தன் குடும்பத்துடன் கீழடி சென்று அங்குள்ள அதிசயங்களை பார்த்து மகிழ்ந்தார் அங்கு இருக்கும் ஒரு தொகுதியின் எம்பி தான் சூர்யாவை அழைத்துச் சென்றார் அதுவும் முறையாக டிக்கெட் வாங்காமல் சென்றாராம் சூர்யா..

இந்த சம்பவங்கள் இது குறித்து பேசி அந்தனன்.. ஏன் சூர்யா மும்பையில் வீடு வாங்க கூடாதா படப்பிடிப்பு சமயத்தில் சென்னை வந்து வந்து செல்வார் அதில் உங்களுக்கு எதுக்கு வலிக்குது எனவே மிகவும் கோபத்துடன் பேசினார் மேலும் அவர் சொன்னது ஒரு நடிகராக சூர்யாவை எனக்கு சுத்தமாக பிடிக்காது ஏனெனில் அவரின் நடிப்பில் ஓவர் ஆட்டிட்யூட் இருக்கும் அதனால் சுத்தமாக பிடிக்காது ஆனால் ஒரு மனிதராக சூர்யா மிகவும் நல்லவர் என கூறினார்.

பெரும்பாலான நடிகர்கள் தான் வாங்கும் சம்பளத்தை எங்கேயோ போய்க் கொட்டுகின்றனர் ஆனால் சூர்யா மட்டும் தான் பெரும்பாதி சம்பளத்தை தான் நடத்தி வருமா அகரம் கட்டளையில் செலவிடுகிறார் அதுமட்டுமல்லாமல் அகரம் கட்டளையின் மூலம் கிட்டதட்ட 5000 மாணவ மாணவிகள்  பயனடைகின்றனர்.  இப்படி சமூகத்தில் அக்கறை கொண்ட சூர்யாவை இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிப்பது தவறு இல்லையா என அந்தணன் கூறி உள்ளார்.