வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் கால் பதித்து அதனைத் தொடர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும்,தனக்கென ஒரு இடத்தையும் நிரந்தரமாக பிடித்த நடிகர் தான் சூர்யா இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் பார்த்தால் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.மேலும் இவரது நடிப்பில் வாடிவாசல் மற்றும் ஒரு சில முக்கிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
மேலும் இவர் தற்பொழுது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றுதான் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடித்து வருகிறார் வரலாற்று சார்ந்த கதைகளத்தில் இந்த திரைப்படம் உருவாகிறது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா பலகெட்ட பில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது அதாவது சூர்யா கொஞ்சம் உடல் எடை கூடி குண்டாக மாறியது போல் இருக்கும் இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஆனால் எதற்காக இவர் கொஞ்சம் குண்டாக இருப்பது போல் தெரிவது என்பது பற்றி தெரியவில்லை.
ஆனால் பலரும் இது கங்குவா திரைப்படத்தில் நடிப்பதற்காக தான் சூர்யா இப்படி மாறி உள்ளார் என்று ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் நடிகர் சூர்யாவா இது பார்ப்பதற்கு அடையாளமே தெரியல என்றும் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.
