சூர்யாவின் ‘ஜில்லுனு ஒரு காதல்’ பட குழந்தை தற்பொழுது வழக்கறிஞர் தெரியுமா.! படிப்பில் கவனம் செலுத்திய பிரபலம்..

sillunu-oru-kadhal
sillunu-oru-kadhal

சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் ஜில்லுனு ஒரு காதல் இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருந்த நிலையில் இளசுகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

அதாவது தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான பலரும் வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள் அந்த வகையில் ஏராளமான குழந்தையின் நட்சத்திரங்கள் தற்பொழுது முன்னணி நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள். அப்படி குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் ஸ்ரேயா ஷர்மா.

இவர் கடந்த 1997ஆம் ஆண்டு பிறந்த நிலையில் தன்னுடைய மூன்று வயதில் இருந்தே நடிக்க தொடங்கினார். அப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிறகு கடந்த 26ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்திருந்தார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

பிறகு ஸ்ரேயா சர்மா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நிலையில் கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த எந்திரன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தார்.

sreya sharma
sreya sharma

அந்த வகையில் தற்பொழுது ஸ்ரேயா ஷர்மா வழக்கறிஞராக இருந்து வரும் நிலையில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தவிர இவர் தீவிர விலங்குப் பிரியர் என்பதால் விலங்குகள் நல நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். எனவே பல விலங்கு நல அமைப்புகளுடன் தொடர்புடையவர் மற்றும் விலங்கு மீட் பண்ண நடவடிக்கைகளில் தவறாமல் ஈடுபட்டு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 26 வயதாகும் ஸ்ரேயா சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.