Vijay Leo: நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். லியோ படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்திருக்கும் நிலையில் இதனை அடுத்து அரசியல் வேலைகளில் களமிறங்கி இருக்கிறார். தற்பொழுது லியோ படத்திற்கு ரஜினியின் ஜெய்லர் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் குறையாமல் இருந்து வரும் நிலையில் மேலும் சூர்யாவின் கங்குவா படம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
விஜயின் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படம் வருகின்ற அக்டோபர் மாதம் ரிலீஸ்சாக இருக்கும் நிலையில் இதற்கு முன்பு ரஜினியின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து இந்த படங்களின் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் தற்பொழுது வந்திருக்கும் தகவலின்படி ஜெயிலர், சூர்யாவின் கங்குவா போன்ற படங்களுக்கு கிடைத்த அளவிற்கு விஜயின் லியோ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இந்த படம் குறைவான ரீச்சை தான் பெற்றுள்ளது.
அதாவது, லியோ படத்தில் இடம் பெற்று இருக்கும் ப்ஸ்ட் சிங்கிள் பாடலான நான் ரெடி பாடல் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்ததால் இதனால் இளம் தலைமுறைகளை பாதிப்பு ஏற்படுத்தி தவறான வழிக்கு செல்ல தூண்டும் என விமர்சனம் செய்தனர்.
இந்த சூழலில் தான் ரஜினியின் ஜெயிலர் படத்தை இடம்பெற்று இருக்கும் காவாலா மற்றும் ஹுகும் ஆகிய பாடல்களும் வெளியானது. விஜயின் நா ரெடி பாடலை விட ரஜினியின் ஜெய்லர் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து சூர்யாவின் கங்குவா பட கிளிம்ஸ் வீடியோ வெளியாகி மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இவ்வாறு ஜெயிலர், கங்குவா படங்களுடன் லியோ படத்தை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது கொஞ்சம் மந்தமான வரவேற்பு தான் கிடைத்துள்ளது.