அடுத்தடுத்து வெளியாக வரிசை கட்டி நிற்கும் சூர்யாவின் திரைப்படங்கள்.!

surya-6575
surya-6575

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் நடிகர் சூர்யா அவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் ஓடிடியில் தான் ரிலீஸ் ஆகிறது. இப்படி இருக்கையில் நடிகர் சூர்யா அவர்கள் வெறும் 6 நிமிடத்தில் திரைக்கு வந்து கலக்கிய திரைப்படம்  விக்ரம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அவர்கள் தளபதி 67 திரைப்படத்திள் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா அவர்கள் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகியுள்ள திரைப்படங்களின் லிஸ்டை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

சூர்யா- சிறுத்தை சிவா :- இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா அவர்கள் சூரியன் 42 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படம் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகிக் கொண்டே வருகிறது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் படபிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா – ஞானவேல்:- சூர்யாவை வைத்து ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் ஞானவேல் அவர்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் மீண்டும் இதே கூட்டணி இணைய உள்ளது. சூர்யா ஞானவேல் இணையும் இந்த படம் மார்ச் மாதம் படபிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

சூர்யா – சுதா கொங்கரா:- கடந்த 2021 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தை இயக்கியவர் தான் சுதா கொங்கரா இந்த திரைப்படம் வெளியாகி பல விருதுகளை குவித்தது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சூர்யாவை திரும்பி பார்க்க வைத்தது. மேலும் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து மேலும் ஒரு திரைப்படத்தை இயக்கு உள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வாடிவாசல் :- தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் நடிகர் தனுசை வைத்து வட சென்னை, பொல்லாதவன், ஆடுகளம், போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து  உருவாக்கப்படுகிறது.

வணக்கம் :- சூர்யாவை வைத்து நந்தா, பிதாமகன், ஆகிய திரைப்படங்களை வெற்றி திரைப்படங்களாக இயக்கியவர் இயக்குனர் பாலா அவர்கள் சூர்யாவை வைத்து இயக்கும் திரைப்படம் வணங்கான். இந்த திரைப்படம் தற்போது நடைபெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகிய ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.