“ROLEX” கெட்டப்பில் இருக்கும் குட்டி குழந்தை – புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட சூர்யா ரசிகர்கள்.!

surya
surya

லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் அண்மையில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் இந்த படத்தின் கதைக்களம் சற்று வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்களின் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இப்பொழுதும் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதன் காரணமாக மிக பிரம்மாண்ட வசூலை அள்ளி உள்ளது விக்ரம் திரைப்படம் இதுவரை உலக அளவில் மட்டுமே சுமார் 420 கோடி வசூல் செய்துள்ளது தமிழகத்தில் மட்டுமே 175 கோடியே அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த படம் வெற்றி பெற கதை, திரைகதை ஆகியவை சிறப்பாக இருந்தாலும் அதற்கு ஏற்றபடி நடிகர்களும் சூப்பராக நடித்திருந்தனர்.

அந்த வகையில் இந்த படத்தில் கமல், விஜய் சேதுபதி, நரேன், பகத் பாசில்  போன்றவர்கள் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இவர்களுடன் சேர்ந்து நடிகர் சூர்யாவும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தார் படத்தின் கடைசியில் சுமார் மூன்று நிமிடம் படத்தில் வந்து போனாலும் அவரது காட்சி மிரட்டும்..

வகையில் இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடிய தீர்த்தனர் இதுவரை இல்லாத கெட்டப்பில் சூர்யா இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து எடுத்தது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தில் கமல்  தனது பேரப்பிள்ளை உடன் பயணித்திருப்பார் அந்த குட்டி குழந்தையை சூப்பராக இந்த படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

அந்த குழந்தை தற்பொழுது சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போன்று அந்த  மேக்கப் செய்து செம லுக்கில் இருக்கிறது. அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டது இதை கமல் பார்த்துவிட்டு பாராட்டினார். இதோ அந்த குட்டிக் குழந்தை ரோலக்ஸ் ஆக மாறி இருக்கும் புகைப்படம்.

vikram movie
vikram movie