தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.தற்பொழுதெல்லாம் தரமான கதை உள்ள திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையை தற்பொழுது நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது மேலும் இதனை தொடர்ந்து சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பூஜை நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக கோவா செல்ல உள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் அடுத்த வாரத்தில் இந்த படத்தில் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவை வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சூர்யாவின் 47வது திரைப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இவ்வாறு பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வனங்கான் திரைப்படத்தை விட சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக எந்த திரைப்படம் தியேட்டரில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது சூர்யாவின் 42வது திரைப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி,பெங்காலி என பத்து மொழிகளில் வெளியிட திட்டம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.