தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருவதால் ஏழாம் அறிவு போல இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா அவர்கள் கடுமையாக வேலை செய்யும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் கடைசியாக ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் களம் இறங்கி ரசிகர்களை கதிகலங்க வைத்தார் சூர்யா. அந்த அளவிற்கு விக்ரம் திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனை அடுத்து இயக்குனர் பாலாவுடன் இணைந்து வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.
ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனையால் இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. இந்த திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
அதுமட்டுமல்லாமல் சூர்யா 42 திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் பல கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து சூர்யா 42 திரைப்படத்திற்காக தனது உடலை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சூர்யா அவர்கள் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இதயத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ.
Bulking his physique for #Suriya42
The OG returns – @Suriya_offl 🔥 pic.twitter.com/Z6L37Nd356
— Suriya Fans Club (@SuriyaFansClub) February 11, 2023