சினிமா உலகில் இருக்கும் உச்ச நட்சத்திரம் நடிகர்கள் அண்மைக்காலமாக சோலோவாக தனது படங்களை ரிலீஸ் செய்தாலும் சில காரணங்களால் தவிர்க்க முடியாமல் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலைமையை ஆகிறது அப்படி அடுத்த வருடம் பொங்கல்..
தினத்தை முன்னிட்டு இரண்டு டாப் நடிகர்கள் நேருக்கு நேராக மோத உள்ளனர். அந்த இரண்டு நடிகர்கள் வேறு யாரும் அல்ல.. அஜித் – விஜய் தான்.. இவர்கள் இருவரும் எட்டு வருடங்களுக்கு பிறகு அடுத்த பொங்கலுக்கு நேருக்கு நேராக மோதக இருக்கின்றனர் அஜித்தின் துணிவு திரைப்படம் தற்பொழுது படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து டப்பிங் டப்பிங் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
வெகு விரைவிலேயே துணிவு படத்தின் டிரைலர், டீசர் என அடுத்தடுத்து அப்டேட்களை கொடுக்க முனைப்பு காட்டி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் தொடர்ந்து சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. மறுபக்கம் வியாபாரத்தையும் ஜோராக தொடங்கி இருக்கிறது வாரிசு படக்குழு..
இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு திரைப்படங்கள் தான் பொங்கலுக்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யா ரசிகர்களும் இதில் சேர்க்கப்படுகின்றனர். அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.. சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் surya 42 இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்ட ஷூட்டிங் கோவாவில் மற்றும் வெளிநாடுகளிலும் நடக்க இருக்கிறது இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பட்டாணி நடித்து வருகிறார் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த வருடம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை சூர்யா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனராம்.