தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் சூர்யா. ஆரம்பத்தில் தட்டு தடுமாறிய இவர் போக போக நல்ல கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார் அந்த வகையில் நந்தா, உன்னை நினைத்து, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், கஜினி..
ஆறு, ஜில்லுனு ஒரு காதல், ஏழாம் அறிவு, சிங்கம் என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு ஹிட் படங்களை கொடுத்தார். கடைசியாக நடித்த ஜெய் பீம், விக்ரம், எதற்கும் பிரிந்தவன் போன்ற படங்களும் சமூக அக்கரை கலந்த படங்களாக இருந்தாலும் இந்த படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது.
இதனை தொடர்ந்து சூர்யா 42 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க வரலாற்று சம்பந்தமான ஒரு படமாக உருவாகி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா பற்றிய ஒரு தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நேருக்கு நேர்.. இந்த படத்தில் முதலில் அஜித் நடித்து வந்தார் சில காரணங்களால் அவர் வெளியேற பிறகு யாரை நடிக்க வைக்கலாம் என வசந்த் நினைத்துக் கொண்டிருந்த பொழுது இயக்குனர் சிவகுமாரின் மகன் சூர்யாவை..
நடிக்க வைக்கலாம் என ஒருவர் கூறியுள்ளார். உடனே சிவகுமார் வீட்டிற்கு வசந்த் சென்று சூர்யாவை நடிக்க அனுப்பும்படி கேட்டுள்ளார் அதற்கு சிவகுமார்.. அதெல்லாம் வேண்டாம் சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது என கூறி உள்ளார். வசந்த் சிவகுமாரை சமாதானப்படுத்தி சூர்யாவை “நேருக்கு நேர்” படத்தில் கமீட் பண்ணிராம்.