தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் தொடர்ந்து படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் 90 காலகட்டங்களில் பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவக்குமார் அவரை தொடர்ந்து அவரது மகன்களான சூர்யா, கார்த்தி.
இருவரும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர் இருவருமே வித்தியாசமான கதை களத்தில் நடிப்பதால் இவர்களது படங்களை பார்ப்பதற்காக ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து வாடிவாசல் மற்றும் சிறுத்தை சிவா உடன் ஒரு படம் பண்ணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவை போல கார்த்தியும் தற்பொழுது பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன. நேற்று கூட கார்த்தியின் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளிவந்து மக்களை கவர்ந்து இழுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கார்த்தி தனது அண்ணன் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் கூறியது நான் யுஎஸ்ஏவில் இருந்து ஒரு லீவுக்காக ஊருக்கு வந்தேன் முதலில் அண்ணனை பார்த்து விடலாம் என்று அதற்காக கும்பகோணம் சென்றேன். கதவை திறந்தார்கள் நான் அண்ணன் எங்கே என்று கேட்டேன் ஆனால் கடைசியில் கதவை திறந்தது அண்ணன் தான்.
சூர்யா அந்த சமயத்தில் பாலா இயக்கத்தில் உருவான நந்தா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அதற்காக அண்ணன் மொட்டை அடித்து முகம் எல்லாம் கொஞ்சம் டார்க்காக கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் எனக்கு அடையாளமே தெரியவில்லை என கூறினார். மேலும் அந்த அளவிற்கு அவர் ஒரு படத்திற்காக டெடிகேஷன்னாக இருந்தது அப்போது ஆச்சரியத்தை கொடுத்தது.