பாலாவின் “வணங்கான்” படத்தை ஓரம் கட்டிய சூர்யா – அடுத்து நடிக்கப் போகும் படம் இதுதான்.!

surya
surya

நடிகர் சூர்யா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் இப்பொழுது கூட சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் முதலாவதாக இயக்குனர் பாலா உடன் கைகோர்த்து வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யா ஒரு மீனவராக நடிக்கிறார்.

வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படபிடிப்பு கோவாவில் தொடங்கப்பட இருக்கிறது.

ஆனால் இயக்குனர் பாலா கதையை இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல கதையில் சில மாற்றங்களை செய்கிறார். அதனால் தற்பொழுது ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருக்கிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் டைம் தான் வேஸ்ட் என்பதை உணர்ந்து கொண்ட சூர்யா வெற்றிமாறனுடன் இணையலாம் என்று பார்த்தால் அவர் தற்பொழுது சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்து வருகிறார்.

இதனால் வாடிவாசல் படத்திலும் இணைய முடியாமல் போய் உள்ளது. வேறு வழி இன்றி சிறுத்தை சிவா உடன் ஏற்கனவே சூர்யா கதை கேட்டிருந்தார் அதனால் தற்பொழுது சிறுத்தை சிவா உடன் சூர்யா இணைய திட்டம் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  வணங்கான் வாடிவாசல் படத்திற்கு முன்பாகவே இந்த படத்தில் அவர் இணைவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வணங்கான் படத்தின் கதையை சற்று விறுவிறுப்பாக பாலா எழுதி வருகிறாராம் சீக்கிரமாகவே படத்தை எடுத்து முடித்தால் சூர்யாவுக்கும் நல்லது பாலாவுக்கும் நல்லதாம். சூர்யா தனது கால்ஷீட் சிறுத்தை சிவாவுக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு பக்கம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.