காதல், ஆக்சன் கதையை தவறவிட்ட சூர்யா.. கெட்டியாக பிடித்து ஹிட் கொடுத்த அஜித்.! எந்த படம் தெரியுமா.?

Ajith
Ajith

Surya Miss Ajith Hit : நடிகர் சூர்யா மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க வித்தியாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெய் பீம், எதற்கு துணிந்தவன் போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்து வணங்கான்.

படத்தில் நடித்தார் மேலும் படத்தை தயாரித்தார். ஆனால் இந்த படத்தின் போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட பிரிந்தனர். உடனே நடிகர் சூர்யா சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து  கங்குவா படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

விடாமுயற்சி : 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் அஜித்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்த படம் முழுக்க முழுக்க 70 களில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்கின்ற கலாச்சாரத்தையும் கொஞ்சம் கற்பனை கதைகள் கலந்த படமாக உருவாகி வருகிறது. அண்மையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ ஒன்று வெளிவந்து வைரலானது தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் சூர்யா தவறவிட்ட கதையில் அஜித் நடித்து வெற்றி கண்ட திரைப்படம் குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. 1995ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை திரைப்படத்தில் அஜித் நடித்திருந்தார்.

ரஜினிக்கு முன்பே விஜயகாந்த் தான் சூப்பர் ஸ்டார்.? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்கள்

ஆனால் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தாராம் சில காரணங்களால் அவர் இந்த படத்தை தவற விடவே அஜித்திற்கு அந்த படம் சென்றடைய மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு நல்ல கதையை தவற விட்டுட்டிஎ தலைவா எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.