சிட்டிசன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா.?

citysan
citysan

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். துணிவு திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் வசுந்தரா தாஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆம் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு 2001 ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் பல கெட்டப்பில் நடித்து அசத்தியிருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் உடன் வசுந்தரா தாஸ், மீனா, நக்மா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடலோரப் பகுதியில் உள்ள அரசம்பட்டி என்ற கிராமத்தில் நடக்கும் அநியாயங்கள், அந்த ஊருக்கு நல்லது செய்ய நினைத்து அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள், இவை அனைத்தையும் தெளிவாக காட்டியுள்ளார். அதன் பிறகு இந்த படத்தில் அந்த அரசியல்வாதிகள்,மற்றும் அரசு ஊழியர்களை எப்படி அஜித் பழிவாங்குகிறார் என்பதை மீதமுள்ள கதை.

இன்நிலையில் இந்த படத்தில் நடிகை வசந்த ராஜா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சமீரா ரெட்டி அவர்கள் தான் நடிக்க இருந்தாராம் ஆனால் ஒரு சில  காரணங்களால் அவரால் அந்த படத்தில் நடிக்கமுடியாமல் போனதாம்.

நடிகை சமீரா ரெட்டி சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சொரியவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தபடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் அஜித் நடிப்பில் வெளியான அசல் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.