நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதேபோல் தான் நடிக்கும் திரைப்படங்களில் தனது முழு உழைப்பையும் போட்டு முடிந்த அளவு மக்களுக்கு தன்னுடைய படத்தின் மூலம் மகிழ்ச்சியை கொடுத்து வருபவர் அதே போல் விக்ரம் புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருபவர். தான் நடிக்கும் திரைப்படத்தில் அதே கதாபாத்திரமாக மாறி விடுவார்.
அதேபோல் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு நேருக்குநேர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அந்த திரைப்படத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார் தற்பொழுது இவர் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
கடைசியாக சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் அதேபோல் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத நடிகர் என்றால் சூர்யாவும் ஒருவர். ஒரு நடிகர் என்பதை தாண்டி சமூக சேவைகளையும் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு நல்லதுகளையும் செய்து வருகிறார்.
மேலும் சமீப காலமாக சூர்யா நடித்து வரும் திரைப்படங்கள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமாக இருந்து வருகிறது. சூர்யா மற்றும் விக்ரம் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பிதாமகன் படத்தில் சூர்யா மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து இருப்பார்கள் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இவர்கள் இருவரும் பிதாமகன் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு தங்களது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வந்தார்களாம் இந்த நிலையில் நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர்களுக்கு இடையே ஈகோ பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் முதன்முதலில் விக்ரம் தான் நடிக்க இருந்தது ஆனால் சூரியா இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதைத் தெரிந்துகொண்டு விக்ரம் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் சூர்யா தன்னுடைய திருமணத்திற்கு ஒட்டுமொத்த நடிகர்களையும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்தார் ஆனால் ஒரு நடிகருக்கு மட்டும் அழைப்பிதழை கொடுக்கவில்லை அழைக்கவும் இல்லை அதுதான் விக்ரம் அப்போது உள்ளே பத்திரிகைகளில் விக்ரமிற்கு சூர்யா தன்னுடைய திருமணத்தின் பொழுது அழைக்கவில்லை என நாளிதழ்களில் வெளியானது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதனை வைத்து பலரும் விமர்சித்தார்கள்.
இப்படி ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் இன்னும் நிலவி வருவதால் தான் சூர்யா மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்காமல் இருப்பதற்கு காரணம் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.