விடாமல் துரத்திய OTT தளம் ஆளை விடுடா சாமி என எஸ்கேப் ஆன சூர்யா.! இதோ சூர்யாவே சொன்ன பதில்

soorarai-pottru
soorarai-pottru

சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதேபோல் சூர்யாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, அந்த வகையில் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.

இந்த திரைப்படம் முதன்முதலில் கோடை விடுமுறைக்கு தான் வெளியிட வேண்டியது ஆனால் கொரனோ ஊரடங்கு காரணமாக இந்த திரைபடத்தை வெளியிடவில்லை, இயல்புநிலை திரும்பியதும் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமிபத்தில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகிய பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை அமேசான் தளம் வெளியிட்டது, அதனால் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தையும் அமேசான் நிறுவனம் வாங்கி விட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது ஆனால் சூர்யாவிறகு படத்தை திரையில் வெளியிடுவதற்கு தான் ஆர்வம்.

இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் சூர்யா தயாரிப்பில் வெளியானது அனைவருக்கும் தெரிந்தது தான் இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனத்திடம் விற்றார் சூர்யா, அதனால் சூர்யா தயாரிப்பில் வெளியாகும் எந்த திரைப்படத்தையும் திரையில் வெளியிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சனை செய்தார்கள் அதனால் சூரரைப்போற்று திரைப்படத்திற்கும் ஏதாவது பிரச்சனை வருமோ என சூர்யா ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்.

அதேபோல் அமேசான் நிறுவனம் சூரரைப்போற்று திரைப்படத்தை அதிக விலை கொடுத்து கேட்டு வருவதால் பேசாமல் அவர்களுக்கே கொடுத்து விடலாமா என சூர்யா யோசித்து வருகிறார், என்றால் திரையரங்கில் ஒளிபரப்பும் போது ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்ற காரணத்தால் தான்.

பொன்மகள் வந்தாள் பிரமோஷனுக்காக சூர்யா ஆன்லைன் வந்தார் அப்பொழுது சூரரைப்போற்று திரைப்படத்திலிருந்து பாடல்கள் மிகவும் அற்புதமாக வந்துள்ளது இதனை திரையில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறி உள்ளார் அதனால் கண்டிப்பாக சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்கில் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.