புதிய திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் சூர்யாவின் மகன்.! வைரலாகும் புகைப்படம்

suriya
suriya

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் இவர் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதால் விரைவில் OTT இணையதளத்திற்கு வந்தது.

மேலும் சூர்யா நடிப்பை தாண்டி படங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அதுமட்டுமில்லாமல் தன்னால் முடிந்த அளவிற்கு சமூக சேவைகளையும் செய்து வருகிறார் தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம் பல மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். இப்படி பல விஷயங்களை செய்து வரும் சூர்யா தற்போது தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில்  நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் சூர்யாவுக்கு 46வது திரைப்படமாக அமைந்துள்ளது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் சுதா கொங்கரா என அடுத்தடுத்து திரைப்படங்களில் சூர்யா மிகவும் பிசியாக நடிக்க இருக்கிறார்.  பாலா சூர்யா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அது மட்டுமில்லாமல் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

வாடிவாசல் திரைப்படத்திற்காக பல கலைகளை சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கான பிரத்தியோக பயிற்சி பெற்று வருவதாகவும் நேரடியாக காளையுடன் சூர்யா மோதும் காட்சி இந்த திரைப்படத்தில் இடம்பெறும் என சமீபத்தில் தகவல் வெளியானது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சூரியவின் மகன் தேவ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அதை பார்த்த ரசிகர்கள் தேவ் திரைப்படத்தில் சூர்யாவின் மகன் அறிமுகமாக இருக்கிறாரா அல்லது வேறு ஏதாவது விஷயமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

suriya son
suriya son