சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படம்..! இசையமைப்பாளர் யார் தெரியுமா.? அனிருத் கிடையாது .?

surya-and-siva-
surya-and-siva-

நடிகர் சூர்யா சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கு துணிந்தவன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இப்போது பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கூட்டணி அமைத்து  வணங்கான் என்ற திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தன. மூன்றாவது கட்டப்பட பிடிப்பு  தொடங்க..

இருந்த நிலையில் பாலா இந்த படத்தின் கதையில் சற்று மாற்றம் செய்ய இருப்பதால் ஷூட்டிங் நடைபெறவில்லை என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது இது இப்படி இருக்க சூர்யாவோ சிறுத்தை சிவா உடன் ஏற்கனவே ஒரு கதையை கேட்டு ஓகே பண்ணி இருந்தார் அதனால் இப்பொழுது சும்மா இருக்க வேண்டாம் என்பதற்காக சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும் சிறுத்தை சிவா எடுக்கும் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறதாம் முதல் பாகத்திற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறதாம் இந்த படத்தில் சூர்யா ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது இந்த படத்திற்கு முதலில் அனிருத் தான்  இசையமைக்க இருந்தார் ஆனால் திடீரென பட குழு இசை அமைப்பாளரை மாற்றி உள்ளது.

சூர்யாவுக்கு இதுவரை ஆறு, மாயாவி, சிங்கம், சிங்கம் 2 என 4 படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் ஐந்தாவது முறையாக இந்த படத்தில் இணைகிறார். இது தற்பொழுது சூர்யா ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது மேலும் இந்த கூட்டணி நிச்சயமாக ஒரு வெற்றி கூட்டணி எனவும் அடித்து கூறுகின்றனர்.

ஏனென்றால் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக அண்மைக்காலமாக இருகின்றன அந்த வகையில் இந்த படமும் ஒரு வெற்றி படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது இதனால் படகுழு செம சந்தோஷத்தில் இருக்கிறதாம். வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த கூட்டணி சேர்ந்து வேலை பார்க்கும் என கூறப்படுகிறது.