தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றுள்ளார்கள் அவர்கள் அனைவரும் தங்களுக்கு வரும் காமெடியை வைத்துதான் நடித்து வந்தார்கள் ஆனால் விவேக் அப்படி கிடையாது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைத்து தனது காமெடியிலும் மக்களுக்கு நல்ல கருத்தை கொண்டு செல்ல நினைக்கும் கருத்தைகூறி வந்தார். அதனால் தான் இவரை சின்ன கலைவாணர் என பலரும் அழைத்தார்கள்.
இந்தநிலையில் விவேக் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி மறைந்தார் இவரின் மறைவு திரை உலகை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தன்னுடைய நகைச்சுவை காமெடியால் மற்றும் கருத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி விவேக் லட்சக்கணக்கான மரங்களை நட்டு உள்ளார்.
நடிகர் விவேக் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 16-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் அவரின் மறைவு தான் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு பிரபலங்கள் பலரும் மரியாதை செலுத்தினார்கள்.
Respect 🙏♥️ pic.twitter.com/aOXLioDPmW
— THE SURIYA FAN (@the_suriya_fan) August 13, 2021
விவேக்கின் உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது இந்தநிலையில் விவேக் நடித்த கடைசி வீடியோ ஒன்றை பதிவிட்டு சூர்யா நெகிழ்ச்சியுடன் உருக்கத்துடன் வெளியிட்டுள்ளார். சூர்யா படத்தில் நடிகர் விவேக் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இப்படி ஒரு நிலையில் விவேக் இறுதியாக பங்கேற்ற ‘எங்க சிரி பார்ப்போம்’ என்ற நிகழ்ச்சியின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள சூர்யா நம் மனதில் எப்பொழுதும் அவர் வாழ்வார் விவேக் சார் இறுதி வீடியோவை பகிர்வதில் நான் பெருமை அடைகிறேன் என மிகவும் உருக்கத்துடன் அந்த பதிவை வெளியிட்டு உள்ளார் சூர்யா. இதை பார்த்த ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
Such a Gem You're @Actor_Vivek Sir ….I was grown up by Seeing Ur Comedies From Childhood🥺 and Still Now I Can't Believe Tht, You're No More.. We'll Miss You Sir , Legend💔💔🥺 https://t.co/M22a34UP0P
— AkHiL💫_Suriya🦁 (@ImDahDude67) August 13, 2021