லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காயத்ரி மற்றும் பலர் நடித்து அசத்தினர். இந்த படத்தில் சூர்யா கடைசி நான்கு நிமிடங்களில் ரோலக்ஸ் கதாபாத்தில் மிரட்டி இருப்பார்.
அது ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துப்போக தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். நடிகர் சூர்யா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மிரட்டக்கூடியவர் அந்த வகையில் வில்லன் கதாபாத்திரம் சூர்யாவுக்கு மிக சிறப்பாக பொருந்துகிறது அதை ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கூட நாம் பார்த்து உள்ளோம்.
சூர்யா ரோலக்ஸ் முன்பாகவே வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படம் 24. இந்த படத்தில் பல கெட்டப்புகளில் சூர்யா வந்து இருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரமும் மிரட்டும் வகையில் இருந்தது. இதுவரை பார்க்காத சூர்யாவை 24 திரைப்படத்தில் பார்த்து பலர் பயந்து போனார்கள்.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாக வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர் ஆனால் இது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் போனது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் விக்ரம் குமார் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது.
24 படத்தின் தொடர்ச்சியை மீண்டும் இயக்க உள்ளதாக பேசினார் மேலும் அவர் சொன்னது சூர்யா தனது சினிமா வாழ்க்கையில் நடித்த எதிர்மறை கதாபாத்திரங்களில் ஒன்றான ஆத்ரேயாவை மீண்டும் இயக்கப் போவதாகவும் ஆத்ரேயாவின் முழுமையான விரிவாக்கத்துடன் ஒரு கதை தயாராக உள்ளது என்றார். ஆனால் எப்பொழுது இது தொடங்கும் என்பது தெரியவில்லை ஆனால் ரெடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.