Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் சூர்யா அவர்களும் ஒருவர், சூர்யா இடைப்பட்ட காலத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார், அதன் பிறகு சூரரைப் போற்று என்ற திரைப்படத்தின் மூலம் விட்ட இடத்தை மீண்டும் பிடித்தார். அதுமட்டுமில்லாமல் ஜெய் பீம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தை பிடித்தார் இதனை தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தில் ரோலெக்ஸ் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்தார்.
இப்படி சூர்யாவின் புகழ் மேலோங்கி இருக்கும் நேரத்தில் பாலா உடன் பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு பாலாவுடன் வணங்கான் என்ற திரைப்படத்தில் இணைந்தார், ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இந்த கூட்டணி பிரிந்து விட்டது நந்தா பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி வனங்கான் திரைப்படத்தில் இணைந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தார்கள் ஆனால் திடீரென பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
மேலும் வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார் அவருக்கு பதில் தற்போது அருண் விஜய் இந்த திரைப்படத்தில் நடித்து வருவதாக பாலா கூறியுள்ளார். அப்படி இருக்கும் நிலையில் வணங்கான் திரைப்படத்தை கைவிட்ட சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தான் தயாரித்து வருகிறார், படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பத்தானி நடித்து வருகிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது.
படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள் இதனால் சில ரசிகர்கள் குறிப்பிட்ட இடத்தில் சூர்யாவை வருங்கால முதல்வர் என போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார்கள் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த போஸ்டரை பார்த்த சூர்யாவின் அப்பா சிவகுமார் ரசிகர்களை அழைத்து இதுபோல் போஸ்டர் ஒட்ட வேணாம் இனிமேல் இது நடக்கக் கூடாது என கடுமையாக கண்டித்துள்ளார், அது மட்டும் இல்லாமல் சிவக்குமார் சூர்யாவிடமும் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள் என எச்சரித்துள்ளாராம் அதன் பிறகு தான் அந்த போஸ்டர் அகற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே தளபதி விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என பலரும் கூறி வரும் நிலையில் தற்போது இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.