சினிமா உலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிறகும் அதை சரியாக தக்கவைத்துக் கொள்ளாமல் விட்டு விடுகின்றனர் அதில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஜீவன்.. இவர் முதலில் யுனிவர்சிட்டி என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன் பிறகு காக்க காக்க திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்தன அந்த வகையில் திருட்டு பயலே, நான் அவன் இல்லை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுப்பார் எனக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் கடைசியாக நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி படங்களாக மாறின. இதனால் அவரது மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக அடி வாங்கியது. இப்படி இருக்கின்ற நிலையில் பயில்வான் ரங்கநாதன் நடிகர் ஜீவன் எப்படி மார்க்கெட்டை தொலைத்தார் என்பது குறித்து விலாவாரியாக கூறியுள்ளார்.
ஜீவன் பிறக்கும்போது மிகுந்த பணக்கார குடும்பத்தின் வாரிசாக பிறந்தவர். சினிமாவில் நடித்து தான் பணம் சம்பாதித்த வேண்டும் என்ற அவசியமாக இல்லை.. அவருக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் சினிமாவில் நுழைந்தார் நான் அவனில்லை படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதே போல சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க வில்லனாக மிரட்டினார்.
இவருடைய கேரியர் சரிவை சந்தித்ததற்கு இரண்டு முக்கிய காரணமாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார் அதாவது ஜீவன் நடிப்பதற்கு எந்த சிரமமான வேலையையும் செய்ய மாட்டார். பாடி லேங்குவேஜ், முக பாவனை ஆகியவை ஜீவனுக்கு வராது மேலும் வெளிநாட்டு மதுபானங்கள் அதிகம் அருந்துபவர். ஜீவன் சமீபத்தில் ஒரு படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் வியாபாரமாகாமல் கிட்டதட்ட 20 கோடி நஷ்டம் ஆகிவிட்டது. அடுத்தடுத்து தொடர் சறுக்களால் ஜீவன் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளர்