அஜித்துக்கு ஜோடியாகும் சூர்யா பட நடிகை.? இது முதல் தடவை அல்ல..

ajith
ajith

vidamuyarchi : தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித் குமார். இதுவரை  60 – வதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான்.

அப்படி கடைசியாக கூட அஜித் நடித்த துணிவு திரைப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து தனது அடுத்த படமான “விடாமுயற்சி” படத்தில் நடிக்க இருக்கிறார் மகிழ் திருமேனி லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின..

ஆனால் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்குவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இதுவரை தென்படவே இல்லை என்பதால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக பல தடவை ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தன ஆனால் முக்கிய சினிமா பிரபலங்கள் பலரும் அதை மறுக்கின்றனர் வெகுவிரைவிலேயே விடாமுயற்சியை சூட்டிங் தொடங்குமென கூறப்படுகிறது.

தற்போது படதிற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறதாம். வெகு விரைவிலேயே உறுதிப்படுத்தப்படும் என ஒரு தகவல் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.  விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடி திரிஷா என சொல்லப்படுவது உண்மையா.? இல்லையா.? பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் அது குறித்து தகவலும் வெளியாகி உள்ளது. லியோ படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா விடாமுயற்சி படத்தில் நடிப்பது உறுதி அஜித்துக்கு அவர் தான் ஜோடி என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெகு விரைவில் தயாரிப்பு சைடுல இருந்து வெளிவரும் எனவும் அடித்துக் கூறுகின்றனர்.  இதனால் விடாமுயற்சி படத்தில் அஜித் – திரிஷா காம்பினேஷனை பார்ப்பது உறுதி.