நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் நீண்ட காலமாக ஒரு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக OTT இணையதளத்தில் வெளியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த நிலையில் அடுத்ததாக சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பதை அவரே சமீபத்தில் அறிவித்தார்,
இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தான் தயாரிக்கிறது, இந்தத் திரைப்படத்திற்காக சூர்யா வித்தியாசமான லுக்கில் இருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது,
இந்த நிலையில் சூர்யா இந்த திரைப்படத்திற்காக எந்தவிதமான மாஸ் கேட்ட போட்டுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் இந்த நிலையில் தற்போது அந்த கெட்டப் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யா சுதா கொங்கரா மகள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் அந்த திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுள்ளது, திருமணத்தில் மணிரத்தினம், சுகாசினி, ஜீவி பிரகாஷ் என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் சூர்யாவும் ஒருவர், அங்கு வந்த சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் இருந்துள்ளார், நீளமான முடியில் இருந்துள்ளார் இதுபோல் ஒரு புதிய கெட்டப் சூர்யா போட்டதில்லை என தெரிகிறது பாண்டிராஜ் திரைப்படத்திற்காக சூர்யா போட்ட கெட்டப் தான் இது என கூறுகிறார்கள் ரசிகர்கள்.
கெட்டப் வெளியே தெரிந்து விடக்கூடாது என ரகசியமாக பாதுகாத்து வந்தார்கள் ஆனால் இந்த திருமண விழாவில் சூர்யா கலந்து கொண்டதால் இவரின் கெட்டப் அனைவருக்கும் தெரிந்து விட்டது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.