நடிகர் சூர்யா சமீப காலமாக அதிகம் சமூக அக்கறை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வெற்றி கண்டு வந்தார். அந்த வகையில் ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற படங்கள் அவருக்கு நல்ல ஹிட் கொடுத்த நிலையில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்னும் படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படம் திரையரங்கில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாலா உடன் இணைந்து தனது 41வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மீனவர் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படமாக கன்னியாகுமரி தூத்துக்குடி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தை சூர்யா தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சூர்யாவிற்கும் பாலா விற்கும் பல தகராறு என பல செய்திகள் உலா வந்தன. அப்படி இல்லை என்றும் ஒரு பக்கம் தகவல் வெளியாகி இருந்த நிலையில் எது உண்மை என்றே பலரும் தெரியாமல் குழம்பி வருகின்றனர்
இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து சூரியா வாடிவாசல் என்னும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த படம் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து தான் படத்தின் சூட்டிங் தொடங்கும் என தகவல்கள் அதிரடியாக வெளியாகி உள்ளது.
மேலும் சூர்யா பாலாவுடன் இணையும் படத்தை முடித்துவிட்டு சிறுத்தை சிவா ஞான வேல் ஆகியவர்கள் படத்தில் நடிக்க உள்ளார் இதனால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்கள் கழித்துதான் தொடங்கப்படும் என தெரியவந்துள்ளது. இதற்கு சரி என்று இயக்குனர் வெற்றிமாறனும் சொல்லிவிட்டாராம் ஆனால் இது சூர்யா ரசிகர்களுக்கு தான் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது