வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக கலக்கி வருபவர்கள் தான் நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக். தற்பொழுது சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் அனைவருக்கும் உதாரணமாக இந்த இரண்டு நடிகர்களும் திகழ்கிறார்கள். மேலும் இவர்கள் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
தற்பொழுது சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் நடித்துள்ள விருமன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல சுவாரசியமான தகவல் வெளியானது.
அந்த வகையில் சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் இணைந்து மேடையில் மிகவும் கலகலப்பாக பேசியது பலரையும் கவர்ந்தது. அதாவது அனைவரையும் வியக்கும் வகையில் இவர்கள் கூறிய தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் அனைவரும் இவர்களுக்கு தங்களது பாராட்டுகளையும் கூறி வருகிறார்கள்.
அதாவது மேடையில் பேசிய இவர்கள் நான் எம்ஜிஆர் அவர்கள் செய்த ஒரு இந்த விஷயத்தை தற்பொழுது வரையிலும் பின்பற்றி வருவதாக கூறியுள்ளார்கள். அதாவது அந்த காலத்தில் எம் ஜி ஆர் தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு மரியாதையையும்,முக்கியத்துவத்தையும் கொடுப்பாராம்.
மேலும் அவர்களை மிகவும் பாதுகாப்பாக அக்கறையாக பார்த்துக் கொள்வதை தனது கடமையாக நினைப்பாராம். எனவே சூர்யா கார்த்தி இருவரும் இந்த விஷயத்தை எங்க அப்பா தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார் மேலும் சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களை நடிகர்களாகிய நாம் தான் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
நம்மளை நம்பி வருபவர்களுக்கு நாம் தான் அனைத்து விதமான பாதுகாப்புகளையும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறு இவர்கள் கூறியவுடன் அனைவரும் கைத்தட்டலை எழுப்பினார்கள். அந்த வகையில் எப்பொழுதும் சிவகுமாரின் குடும்பத்தில் இருப்பவர்கள் பாரம்பரியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள்.
மேலும் கலாச்சாரத்தை பின்பற்றும் குடும்பமாக இவர்களின் குடும்பம் இருந்து வருகிறது. இவ்வாறு சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் தனது அப்பாவின் பேச்சை கேட்டு மிகவும் மரியாதையாக நடந்து வருகிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் சிவகுமாரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்படும் அனைவருக்கும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.