குடும்பத்துடன் சென்ற சூர்யா ஜோதிகா.! எங்கு எதுக்காக தெரியுமா.?

surya
surya

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் சூர்யா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தற்போது  புகழின் உச்சத்தில் உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாலாமே இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரை போற்று திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மேலும் சூரரை போற்று திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் என ஐந்து பிரிவுகளிலும் தேசிய விருதுகளை வாங்கி குவித்து உள்ளது சூரரை போற்று.

இந்நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளதால் அதில் கலந்து கொள்ள நடிகர் சூர்யா இன்று டெல்லி செல்கிறார். சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது. நடிகர் சூர்யாவுக்கு இதுவே முதல் தேசிய விருது என்பதால்  அவர் அந்த விருதை வாங்குவதை பார்க்க அவருடன் குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

சூர்யா மகன் தேவ், மகள் தியா, மற்றும் மனைவி ஜோதிகா, உடன் நடிகர் சூர்யா அவர்கள் விமான நிலையத்தில் வந்த போது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் பயிற்சி வீடியோ சமீபத்தில் வெளியாகிய மிகவும் வைரலானது அதுமட்டுமல்லாமல் வாடிவாசல் திரைப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.அதனைத் தொடர்ந்து சூர்யா 42 திரைப்படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.