சூர்யா 42ல் பல கெட்டப்பில் கலக்கும் நடிகர் சூர்யா.! எத்தனை கெட்டப் தெரியுமா.? வாயடைத்துப்போன ரசிகர்கள்..

surya-42
surya-42

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருபுறம் பிசினஸ் வேலைகளையும் செய்து வருகிறார். மேலும் இவர் கிட்டத்தட்ட ஆறு பிசினஸ்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இதில் பல கோடி லாபம் சூர்யாவுக்கு கிடைத்து வருவதால் திரைப்படங்களில் நடிப்பதற்கான எண்ணிக்கையை குறைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் சூர்யா தன்னுடைய 42வது திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து மிருணால் தாகூர், திஷா பாட்னி  போன்ற முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூரியன் 42வது படத்தில் பல கெட்ட போட இருப்பதாகவும் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் புகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஐந்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். ஐந்து கதாபாத்திரங்களிலும் மொத்தம் 13 கேட்ட பில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே கண்டிப்பாக சூரியன் 42 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றும் வகையில் அமைவதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா இந்த படத்தில் நடித்து முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறனும் தற்பொழுது விஜய் சேதுபதி, சூரி இவர்களை வைத்து விடுதலை திரைப்படத்தினை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் சூர்யா-வெற்றிமாறன் காம்போவில் வாடிவாசல் திரைப்படத்தினை எதிர்பார்க்கலாம்.