சூர்யா என்னை விட 5 வயது பெரியவர் – தெரிந்தும் அவருக்கு அம்மாவாக நடிச்சேன்.!

surya
surya

சினிமா உலகில் ஒரு நடிகர் ஹீரோவாக படத்தில் நடித்து விட்டால் போதும் அப்பொழுதிலிருந்து கடைசி வரையும் ஹீரோவாக நடிப்பவர்கள். ஆனால் ஹீரோயின்கள் அப்படி கிடையாது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவர்கள்  அம்மா, சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி விடுவார்கள். இவர்களையாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம் குணசித்திர நடிகைகள் ரொம்ப பாவம்.

ஏனென்றால் எடுத்த உடனேயே ஹீரோ, ஹீரோயினுக்கு அம்மா, அப்பா, சித்தி, தோழி போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் அப்படித்தான் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சூர்யாவை விட ஐந்து வயது குறைந்த நடிகையாக இருந்தாலும் அவருக்கு அம்மாவாக நடித்துள்ளார் அந்த படம் எது என்பது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நந்தா இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து லைலா, கருணாஸ் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருப்பனர். அந்த படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக ராஜஸ்ரீ நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு அவர் ஒரு சில படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் படங்களில் நடிக்கவில்லை.

இவர் அண்மையில் பேட்டி ஒன்றில்  சினிமா குறித்து பேசினார் அப்பொழுது நந்தா படம் குறித்து கேட்கப்பட்டது அப்பொழுது அவர் சொன்னது. நந்தா படத்தில் நான் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்திருப்பேன் ஆனால் எனக்கும் சூர்யாவை விட 5 வயது குறைந்தவள் நான் ஆனாலும் நந்தா படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தேன்.

rajashree
rajashree

படப்பிடிப்பு தளத்தில் நான் சூர்யாவை அண்ணா என்று தான் கூப்பிடுவேன் ஆனால் சூர்யாவுக்கு அப்படி கூப்பிட்டால் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. இப்பொழுதும் நான் சூர்யாவை அண்ணான்னு கூப்பிட்டா பிடிக்காது என ராஜஸ்ரீ கூறினார் மேலும் பாலா சாரை சந்தித்து பேசினேன் அவர் நீ மீண்டும் நடிக்க வந்தா வாய்ப்பு தருகிறேன் என சொன்னதாக பேட்டியில் தெரிவித்தார்.