தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடுபவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து நல்ல நல்ல இயக்குனருடன் கைகோர்த்து படம் பண்ணி வருகிறார்.
முதலாவதாக பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து பாலாவுக்கும், சூர்யாவுக்கும் சுத்தமாக செட்டாகவே இல்லை மேலும் பாலா வழக்கமாக நடிகர்களிடம் ஓவராக பேசுவது போல சூர்யா உடனும் பேசியுள்ளார். மேலும் படத்தின் பட்ஜெட்டையும் தாறுமாறாக ஏற்றியது.
ஒரு கட்டத்தில் சூர்யா உணர்ந்து கொண்டு இந்த படத்தில் இருந்து தனது தயாரிப்பு நிறுவனத்தையும், நடிப்பதையும் மொத்தமாக விலகிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சூர்யா தனது 42வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தமாக இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
சூர்யாவை வைத்து பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் ஹரி. இவருடன் நடிகர் சூர்யா மீண்டும் ஒருமுறை கைகோர்த்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க இருக்கிறார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அருவா திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் சூர்யா இரட்டை விதமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் அவருக்கு ஜோடியாக..
எந்தெந்த ஹீரோயின்கள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் தற்போது அதற்கான பதிலும் கிடைத்துள்ளது ஆம் சூர்யாவின் அருவா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் பூஜா ஹெக்டே நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெகு விரைவில் வரும்..இதனால் சூர்யா ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.