சினிமாவில் ஒரு சில கூட்டணியில் உருவாகும் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும், ஆனால் அதன் பிறகு அவர்கள் மீண்டும் எப்பொழுது இணைவார்கள் என ரசிகர்களை ஏங்க வைத்து விடுவார்கள்.
அந்த வகையில் சிறந்த கூட்டணி என்றால் சூர்யா-கௌதம் மேனன் அவர்களைக் கூறலாம் ஏனென்றால் இவர்கள் காக்க காக்க என்ற திரைப்படத்தில் இணைந்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்கள் அதன் பிறகு மீண்டும் வாரணமாயிரம் என்ற திரைப்படத்தில் இணைந்து ரசிகர்களை உச்சக்கட்ட சந்தோசத்தில் ஆழ்த்தினார்கள்.
இந்த நிலையில் மீண்டும் சூர்யா கவுதம் கூட்டணி எப்போது இணையப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் நவரசா வெப் சீரியஸில் சூர்யா இணைந்துள்ளார். இது சூர்யா ரசிகர்களிடையே மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் காக்க காக்க திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது அந்த அளவு மிகப் பெரிய ஹிட் அடைந்து திரைப்படம் அந்த திரைப்படத்தின் பொழுது கௌதம் மேனன் மற்றும் சூர்யா ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்