தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் சூர்யா இவர் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளன அதனால் இவர் அடுத்தடுத்த நடிக்கும் படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது சூர்யா தற்பொழுது தனது 42வது திரைப்படத்தில் நடித்து ஓடுகிறார்
அந்த படம் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது அந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து வாடிவாசல் மற்றும் பெயிரிடப்படாத ஒரு சில படங்களில் சூர்யா கமிட் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகர் சூர்யா வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார் திடீரென சில காரணங்களால் அந்த படத்திலிருந்து முழுவதுமாக வெளியேறினார் மேலும் தனது 2 டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனத்தையும் அதில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டார்.
சூர்யா இந்த படத்தில் இருந்து வெளிவர பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்ட வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் இளம் இயக்குனர் லோகேஷ் சூர்யா சாரை சந்தித்து ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டாராம் முதலில் விருப்பம் இல்லாமல் கேட்ட சூர்யா..
பின்னர் வணங்கான் படத்திற்கு சிறிது பிரேக் விட்டு விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கப் போனார் இதன் பிறகு தான் சூர்யா மேல் பாலாவுக்கு கோபம் வர காரணமாக அமைந்தது என கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.