vijayakanth suriya clashed movie : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் , இவர் பல நடிகர்களுக்கும் பல இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார் என நாம் அடிக்கடி சினிமாவில் பலர் கூறியதை பார்த்துள்ளோம்.
அதேபோல் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என ஒரு பக்கம் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தாலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார் சூர்யா. நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு முதன்முதலாக அறிமுகமானார்.
அதன் பிறகு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பெரியண்ணா என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் சூர்யா மக்கள் மத்தியில் பிரபலமாக ஆரம்பித்தார். ஆனால் விஜயகாந்த் மற்றும் சூர்யா இருவரின் திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாகி மோதிக்கொண்ட விஷயங்களும் உண்டு அது என்ன என்ன திரைப்படம் என்று இங்கே காணலாம்.
விஜயகாந்த் – உளவுத்துறை, சூர்யா – காதலே நிம்மதி :
1998 ஜனவரி 14ஆம் தேதி விஜயகாந்த் ,மீனா, சங்கவி, ராதாரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் உளவுத்துறை. இந்த திரைப்படம் விஜயகாந்த் சினிமா கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் உளவுத்துறை திரைப்படத்துடன் சூர்யாவின் காதலே நிம்மதி திரைப்படம் வெளியாகியது ஆனால் இந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை.
விஜயகாந்த் – தர்மா, சூர்யா – சந்திப்போமா :
1998 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் தர்மா இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், ஜெய்சங்கர், மன்சூர் அலிகான், பிரீத்தா விஜயகுமார், பொன்னம்பலம், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதேபோல் விஜயகாந்த் திரைப்படத்தின் தர்மா திரைப்படம் வெளியாகிய பொழுது சூர்யாவின் சந்திப்போமா திரைப்படமும் வெளியாகியது இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரீத்தா விஜயகுமார் தான் நடித்திருந்தார் ஆனாலும் இந்த திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை.
விஜயகாந்த் – வாஞ்சிநாதன், சூர்யா – பிரண்ட்ஸ் :
விஜயகாந்த் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் வாஞ்சிநாதன் இந்த திரைப்படத்தில் சாக்ஷி சிவானந்த், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் வாஞ்சிநாதன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் விஜய் சூர்யா ஆகியோர் நடிப்பில் பிரெண்ட்ஸ் திரைப்படமும் வாஞ்சிநாதன் திரைப்படத்துடன் மோதியது பிரண்ட்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படமும் வெற்றி திரைப்படங்களாக அறிவிக்கப்பட்டன.
விஜயகாந்த் – தவசி, சூர்யா – நந்தா
2001 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் தவசி இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து சௌந்தர்யா, நாசர் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள். தவசி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதேபோல் இந்த திரைப்படத்துடன் சூர்யாவின் நந்தா திரைப்படமும் வெளியானது கீழே கிடந்த சூரியாவை மேலே தூக்கி விட்ட திரைப்படம் நந்தா தான் இந்த திரைப்படத்தின் மூலம் சூர்யாவின் கேரியர் தலைகீழாக மாறியது திரைப்படமும் வெற்றி பெற்றது.