தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூர்யா இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார், சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படம் உருவாக்கியுள்ளது இந்த திரைப்படம் திரையில் தான் வரும் என படக்குழு கூறியுள்ளார்கள் அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
சூர்யா தன்னுடைய அறக்கட்டளை மூலமாக பல உதவிகளை செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதனால் சாதாரண மக்கள் தின கூலி தொழிலாளிகள் அனைவரும் உணவு இல்லாமலும் வேலை இல்லாமலும தவித்து வருகிறார்கள், அதேபோல் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் வீடு இல்லாமல் பல மக்கள் சாலை ஓரங்களில் தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு 80 நாட்களாக சூர்யா ரசிகர்கள் மதிய உணவு, இரவு உணவு, வாட்டர் என அனைத்தையும் வழங்கி வருகிறார்கள்.
எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் சூர்யா ரசிகர்கள் 80 நாட்களாக இப்படி உதவி செய்து வருவது பாராட்டைப் பெற்றுள்ளது, வடசென்னையில் உள்ள சூர்யா ரசிகர்கள் தான் இதுபோல் செய்து வருகிறார்கள், இதன்மூலம் சூர்யாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் ரசிகர்கள்.
80 நாட்களில் கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உதவி செய்துள்ளதாக தெரிகிறது.