சமீபத்தில் சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சூரரை போற்ற திரைப்படம் இந்த திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகிய மாபெரும் வெற்றி கண்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யா மற்றும் சுதா கங்காரா என அனைவரையும் ரசிகர்கள் பாராட்டி உள்ளார்கள்.
என்னதான் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டாலும் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வருத்தம் இந்த திரைப்படத்தில் உள்ளது ஏனெனில் சூறரை போற்று திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடாமல் போனது தான் அதற்கு காரணம். ஆனால் அப்போதைய சூழ்நிலையில் இன்று திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட முடியாமல் போய்விட்டது.
தற்பொழுது இந்த திரைப்படத்தினை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து சுதா கொங்கரா அவர்கள் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்காரா அவர்கள் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த பிரம்மாண்டதிரைப்படத்தினை கே ஜி எஃப் திரைப்படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என பத்திரிக்கையில் செய்திகள் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஆனது மிக விரைவில் ஆரம்பிக்கும் என கூறியுள்ளார்கள்.
இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணைந்து உருவாக உள்ள திரைப்படம் ஆனது தற்பொழுது உருவாக போவது கிடையாதாம் அவை உருவாக்குவதற்கு சில வருடங்கள் ஆகும் என கூறியுள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் சூர்யா மற்றும் சுதா கோங்கரா இணையும் திரைப்படம் இன்னும் கையெழுத்து கூட போடவில்லையாம் வெறும் வாய்ப்பேச்சாக சூர்யா சரி என்று கூறியுள்ளாராம். பொதுவாக அறிமுக இயக்குனர் ஒரு திரைப்படம் ஹிட் கொடுத்து விட்டால் போதும் அவரிடம் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து கொள்கிறார்கள் ஆனால் மிகப் பெரிய வெற்றி படத்தை கொடுத்த சுதா கோங்காரா படத்தில் நடிக்க சூர்யா தயங்குவது ஏன் என்றுதான் புரியவில்லை.