வருமான வரிதுறையினர் விரித்த வலையில் தானாகவே வந்து மாட்டிய தனுஷ்.? சிக்கி தவிக்கும் சூர்யா.. கார்த்தி..

actors
actors

அண்மை காலமாக பிரபலங்களின் வீடுகளில் ரைட் நடத்தப்படுகிறது பிரபல பைனான்சியர் மதுரையை சேர்ந்த அன்பு செழியன் தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களுக்கு சினிமா பைனான்சியராக இருந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சினிமா பைனான்ஸ் அன்புச் செல்வனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரிகள் நடத்தி இருந்த சோதனையில் 77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது மேலும் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்வதற்கான ஆதாரமும் கணக்கிடப்பட்டது. அன்பு செழியன் பைனான்ஸ் செய்த சுமார் 20 தயாரிப்பாளர்கள் பட்டியலும் வருமான வரித்துறையினர் கையில் சிக்கியது. நடிகர் தனுஷ் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சில படங்களை தயாரித்து மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளார்.

அப்பொழுது மீண்டும் அவர் படம் தயாரிக்க அன்பு செழியன் இடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது அது வருமானவரித்துறை கையில் சிக்கிய 20 தயாரிப்பாளர் பெயர்களில் தனுஷ் பெயரும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அன்பு செழியனிடம் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்த தயாரிப்பாளர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அன்பு செழியன் இடமிருந்து இவர்கள் வாங்கிய பணத்திற்கும் மற்றும் திருப்பி கொடுத்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

இதனால் எந்த மாதிரியாக நீங்கள் அன்புச் செழியனிடம் பணம் வாங்கினீங்க, அதை எப்படி திருப்பி கொடுத்தீர்கள் என்ற விளக்கம் தர வேண்டும் இதற்கு வருமானவரித்துறை தரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டது இதனை தொடர்ந்து வருமானவரித்துறை முறையான தகவலை தெரிவிக்காததை தொடர்ந்து நேற்று மீண்டும் வருமானவரித்துறையினர் களத்தில் இறங்கி முக்கிய இடங்களில் சோதனை நடத்தினார் இதில் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் தயாரிப்பாளர் தானு, எஸ் ஆர் பிரபு, லக்ஷ்மணக்குமார் ஆகியோருக்கு   சொந்தமான இடங்களிலும் வருமான வரி சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதில் லக்ஷ்மண குமார் முக்கியமாக சிக்கி உள்ளார் இவர் சூர்யா மற்றும் கார்த்திக்கு ரொம்ப முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் லஷ்மணக்குமாரை விசாரித்தால் சூர்யா மற்றும் கார்த்தி சிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு பக்கம் பரவலாக பேசப்படுகிறது. தயாரிப்பாளர்கள் வீட்டில் நடைபெறும் விசாரணையின் போது நடிகரின் பெயர்கள் அடிபட்டால் அவர்களையும் விசாரிப்பார்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்றால் அவர்கள் வீட்டிலும் ரைடு நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.