ரஜினி போலவே நடிகைக்கு ஒரு கோடி சம்பளம் தருமாறு கேட்ட சூர்யா.. உதயநிதி செய்த சிறப்பான சம்பவம்

rajinikanth
rajinikanth

Surya: சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களுக்கு மட்டுமே கோடி கோடியாக சம்பளம் வழங்கப்படுகிறது ஏராளமான பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் நடிகர்களை பல கோடி கொடுத்து தங்களது படங்களில் நடிக்க வைக்க போட்டி போட்டுக் கொள்கின்றனர். ஆனால் நடிகைகளுக்கு நடிகர்களுக்கு கொடுக்கும் பாதி சம்பளம் கூட கொடுக்கப்படுவதில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ரஜினி பிரபல நடிகர் ஒரு கோடி ரூபாய் கொடுக்க சொன்னது போல் சூர்யாவும் இவ்வாறு செய்துள்ளார். அதாவது கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற படையப்பா திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ரஜினி உள்ளிட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அப்படி படையப்பா படத்தில் சில காட்சிகளில் மட்டுமே சிவாஜி நடித்திருப்பார்.

இருந்தாலும் இதற்காக ரஜினி படையப்பா படத்தில் நடித்த சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க சொன்னாராம் எனவே ரஜினியின் பேச்சை கேட்ட படக்குழு சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் தொகையை கொடுத்தனர். இதனை அடுத்து பல வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் சரோஜாதேவி மீண்டும் நடிக்க வந்தார் அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் சரோஜாதேவி நடித்திருந்தார்.

எனவே இந்த படத்தில் சரோஜாதேவி நடித்ததற்காக ஆதவன் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதியிடம் சரோஜாதேவிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாராம். தனக்கு தந்த சம்பளத்தில் அந்த தொகையை எடுத்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார் எனவே இதனைக் கேட்டுக் கொண்ட உதயநிதி ஆதவன் படத்திற்காக சரோஜாதேவிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து விட்டாராம். அதேபோல் சூர்யாவின் சம்பளத்தையும் முழுமையாக கொடுத்துள்ளார். இவ்வாறு ரஜினி மூத்த நடிகருக்கு மரியாதை தந்தது போல் சூர்யாவும் இவ்வாறு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.