அஜித்தை போலவே செம்ம சூப்பராக பிரியாணி சமைக்கும் நடிகர் சூர்யா – வைரல் புகைப்படம்.!

surya

நடிகர் சூர்யாவுக்கு சினிமா ஆரம்பத்தில் சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் வருகின்ற ஒன்று இரண்டு படங்களில் நடித்து வந்தார் ஆனால் போகப் போக நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தொடர் வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடித்து  அசத்தார்.

மேலும் இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்களும் உருவாகினர் என்பது குறிப்பிடத்தக்கது திரை உலகில் தற்போது சூப்பராக ஜொலிக்கும் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இன்னும் குவிந்து கொண்டுதான் இருக்கிறது. நடிகர் சூர்யா கையில் தற்பொழுது வணங்கான், இயக்குனர் வெற்றிமாறனுடன்  வாடிவாசல், சிறுத்தை சிவா உடன் ஒரு படம் பணி வருகிறார் மற்றும் ஒரு சில படங்களில் கமிட் ஆகியும் இருக்கிறார்.

தொடர்ந்து திரை உலகில் ஜொலிக்கும் இவர் மறுபக்கம் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். சூர்யாவை போல நடிகை ஜோதிகாவும் அவ்வபொழுது நல்ல கதைகளில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

இவரும் படங்களில் நடிப்பதையும் தாண்டி 2டி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருவதால் நாலா பக்கமும் சூர்யாவுக்கு காசு வந்த வண்ணமே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா சமைக்கும் போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு  வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சும்மா கலக்குறீங்க  எனக்கூறி லைக்குகளையும், கமெண்டுகளையும் போட்டு வருகின்றனர் இதோ சூர்யா சமைக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

SURYA
SURYA