ஹரி படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கும் சூர்யா..! அவமானத்தை நினைத்து பார்த்து ஒதுக்கும் இயக்குனர்..! அப்படி என்ன தான் நடந்தது.?

surya-and-hari-
surya-and-hari-

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் ஐயா, ஆறு, சிங்கம், சாமி போன்ற ஆக்சன் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வருகிறார். மேலும் ஹரி அதிகம் நடிகர் சூர்யாவை வைத்து தான் படம் எடுத்துள்ளார். அந்த வகையில் ஆறு, வேல் போன்ற படங்களை தொடர்ந்து சிங்கம் என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் இந்த படம் சூர்யா கேரியரில் மிக முக்கிய ஒரு படமாக பார்க்கப்பட்டது.

சிங்கம் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் 2 சிங்கம் 3 என அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட்டது. இதில் சிங்கம் 2 நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிங்கம் 3 மட்டும் சற்று தோல்வியை தழுவியது. மேலும் இயக்குனர் ஹரி விக்ரமை வைத்து சாமி மற்றும் சாமி ஸ்கொயர் படத்தை எடுத்தார் அதிலும் முதல் பாகம் நல்ல வெற்றி அடைந்தது.

இரண்டாவது பாகம் சற்று தோல்வியை தழுவியதால் பின்பு சினிமாவில் இயக்குனர் ஹரி சற்று சரிவை சந்தித்தார். ஒரு கட்டத்தில் இயக்குனர் ஹரி சூர்யாவுடன் நல்ல நட்பு இருப்பதன் காரணமாக மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் சூர்யாவிற்கு ஒரு கதையை தயார் செய்து அவரிடம் கூறியுள்ளார். சூர்யாவும் அந்த படத்தில் நடிக்க சம்மதம் சொன்னதும்..

படத்திற்கு அருவா என பெயரிடப்பட்டு படத்தின் ஆரம்ப வேலைகள் அனைத்தும் நடைபெற்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஹரி இதற்கு முன் தோல்வி படங்களை கொடுத்துள்ளதால் இந்த படமும் தோல்வி அடைந்து விடுமோ என்ற எண்ணத்தில் சூர்யா அருவா படத்தில் இருந்து பாதியிலே வெளியேறினார். இதன் மூலம் கோபமடைந்த ஹரி அருவா படத்தை யானை என பெயர் மாற்றி அருண் விஜயை நடிக்க வைத்துள்ளார்.

சூர்யா இந்த படத்தின் கதையை வேண்டாம் என்று ஒதுக்கியதால் இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற எண்ணத்தில் அருண் விஜயை வைத்து படப்பிடிப்பை தொடங்கி சிறப்பாக படப்பிடிப்பு முடிவடைந்து அண்மையில் தான் யானை படம் திரையரங்கில் வெளியானது படமும் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் நல்ல வசூல் வேட்டியும் நடத்தியது.

இதைப் பார்த்த நடிகர் சூர்யா பின்பு ஹரியை போனில் தொடர்பு கொண்டு நாம் ஒரு படம் பண்ணலாம் கதையை ரெடி பண்ணுங்க என கேட்டுள்ளார். அதற்கு அப்போது ஹரியும் ஓகே சொல்லிவிட்டார். இருந்தாலும் ஹரி பழசை மறக்காமல் சூர்யா அப்படி செய்ததை மனதில் வைத்துக்கொண்டு சூர்யாவுடன் இணைமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.