நடிகர் சூர்யா அண்மைகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த படங்கள் அனைத்தும் வெற்றியை பதிவு செய்தது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து ஒன்னு ரெண்டு படங்களில் கேமியோ ரோலில் மட்டுமே..
தலை காட்டி வந்த இவர் பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் இணைந்து நடித்தார். மேலும் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்தது. சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்தார். வணங்கான் படத்தின் ஷூட்டிங் எல்லாம் நன்றாகத் தான் போக்கியது ஆனால் திடீரென இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும்..
இடையே பிரச்சனை ஏற்பட்டு படம் ட்ராப்பானது இது குறித்து பல வதந்திகள் வெளியான நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் சில உண்மைகளை உடைத்து உள்ளார். அவர் சொன்னது என்னவென்றால்.. இயக்குனர் பாலா சூர்யாவை இன்னும் பழைய சூர்யாவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்.
வணங்கான் படப்பிடிப்பு தொடங்கியதும் ஒன்பது நாட்கள் நடிகர் சூர்யாவை ஓடவிட்டு படத்தை எடுத்துள்ளார். ஆனால் சூர்யாவால் இந்த பழைய பாலாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை இதனால் என்ன சார் ஓட விட்டுட்டு இருக்கீங்க.. என கேள்வி எழுப்ப இயக்குனர் பாலா சொல்லறத மட்டும் செய்யுங்கள் சூர்யா என கூறி உள்ளார்.
அங்கிருந்துதான் பிரச்சனை எரிய ஆரம்பித்தது ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே அந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க பிறகு சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேறினார் மேலும் அவரது 2D தயாரிப்பு அந்த படத்தில் இருந்து வெளியேறியது என கூறினார்.