மீண்டும் அதிரடி வேட்டை ஆரம்பம்.! வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ மாஸ் அப்டேட் இதோ.!

suriya-vetrimaran
suriya-vetrimaran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா, இவர் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார், அந்த திரைப்படத்திற்கு அருவா என பெயர் வைத்துள்ளார்கள், இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் அதிரடி திரைப்படமாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்னும் நாவலைக் குறித்து கதை உருவாக இருக்கிறது, வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் அதனால் இந்த திரைப்படத்தில் சூர்யா இணைந்துள்ளதால் சூர்யா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள் இந்த திரைப்படத்தை.

வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ என்னும் நாவலை குறித்து உருவாகும் திரைப்படத்தில் இசை அமைக்கும் வேளைகளில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இறங்கிவிட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.